GDS to MTS Notification 2021- Tamilnadu Circle

GDS to MTS Notification 2021- Tamilnadu Circle



அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!

தமிழ் மாநிலத்தில் 2021 ஆண்டிற்கான GDS ஊழியர்கள் மூலம் நடைபெறும் MTS காலியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

*தேர்வு நாள்:- 26.12.2021.


*விண்ணப்பங்கள் கோட்ட அலுவலகத்திற்கு சென்று சேர வேண்டிய கடைசி நாள்:- 06.12.2021(ஓரிரு நாட்கள் முன்னதாகவே சம்பந்தப்பட்ட உட்கோட்டங்களுக்கு அனுப்ப வைக்க வேண்டும்)


காலிபணியிடங்கள் பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

**************************************************

அஞ்சல் துறையால் அரசிதழில் வெளியிடப்பட்ட MTS தேர்வு விதிமுறைகள்(RECURITMENT RULES 2018)அடிப்படையில் இந்த தேர்வு நடைபெறும். கடந்த 10.05.2019 இல் வெளியிடப்பட்ட புதியபாடதிட்டபடி தேர்வு நடைபெறும். வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் தமிழில் அமைந்திருக்கும்.


31.03.2021 அன்று 3 ஆண்டுகள் பணி முடித்த GDS ஊழியர்கள் இந்த போட்டித் தேர்வு எழுத தகுதி உள்ளவர்கள். இதில் பூர்த்திசெய்யப்படாத இடங்கள் DIRECT RECRUITMENT மூலம் நிரப்பப்படும்.


50%காலிஇடங்கள்- குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணிமுடித்த GDSஊழியர்கள் மூலம் சீனியாரிட்டி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் பூர்த்தி செய்யபடாத இடங்கள் GDS ஊழியர்கள் மூலம் நடைபெறும் இந்தபோட்டி தேர்வுகளுக்கான காலியிடங்களுடன் சேர்க்கப்படும்.


25% காலி இடங்கள்-கேஷுவல் லேபர் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் பூர்த்திசெய்யப்படாத இடங்கள் GDSஊழியர்கள் மூலம் நடைபெறும் இந்த போட்டி தேர்வுகளுக்கான காலியிடங்களுடன் சேர்க்கப்படும்.


ஒரு கோட்டத்தில் பூர்த்தி செய்யப்படாத Surplus vacancies நிரப்பப்படுவது மாநில முழுவதும் உள்ள மற்ற அனைத்து கோட்டங்களின் மதிப்பெண்கள் தரவரிசையில் நிரப்பப்படும்.


இந்த தேர்வினை எழுத GDS ஊழியர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு எதுவும் இல்லை. எந்தவிதமான கல்வித் தகுதியும் இல்லை.


போட்டித் தேர்வு இரண்டு தாள்களை கொண்டதாக இருக்கும் . முதல் தாள் காலை 10 மணியிலிருந்து 11 மணி வரை நடைபெறும் .இலாகா,கணிதம்,பொதுஅறிவு, திறனறி தேர்வு உள்ளிட்டவைகளை கொண்டதாக இருக்கும்.

இது 50 வினாக்கள் கொண்டிருக்கும் .

ஒவ்வொரு வினாவிற்கும் 2 மதிப்பெண் அடிப்படையில் 100 மதிப்பெண்கள் கொண்டதாக இருக்கும்.


இரண்டாம் தாள் தகுதி பெறும் தாளாக மட்டுமே இருக்கும். இரண்டாம் தாள் காலை 11.10 மணியிலிருந்து 12.10மணி வரை நடைபெறும் . அதில் குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெற்றால் போதுமானது. மாநில மொழிகளில் இருந்து ஆங்கில ஆக்கம். ஆங்கிலத்திலிருந்து மாநில மொழிக்கு மொழிபெயர்ப்பு. கடிதம் எழுதுதல், குறிப்பிட்ட தலைப்பில் கட்டுரை ஆகிய நான்கு பகுதிகளைக் கொண்டதாக இருக்கும் . 60 நிமிடங்கள் நடைபெறும். 50 மதிப்பெண்களை கொண்டதாக இருக்கும்.


இரண்டாம் தாளில் பெறப்படும் மதிப்பெண்கள் மெரிட் அடிப்படையில் சேர்க்கப்படாது.


முதல் தாளில் பெறும் மதிப்பெண்களின் மெரிட் அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் செய்யப்படும்.

தகுதியுள்ள தோழர்கள், தோழியர்கள் நன்கு படித்து தேர்வில் வெற்றி பெற புரட்சிகரமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.





Post a Comment

Previous Post Next Post

Iklan In-Feed (homepage)

" target="_blank">Responsive Advertisement