SB Order No 23/2021 - தமிழாக்கம்:
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சேமிப்பு வங்கி பிரிவில் டெபாசிட்தாரருக்கு பதிலாக messenger பயன்படுத்துவது குறித்து அஞ்சல்வாரியத்தின் உத்தரவு சமீபத்தில் பிறப்பிக்கப்பட்டது. இதன்படி மெசஞ்சர் சேவை என்பது ரத்து செய்யப்பட்டது .
எனினும் மூத்த குடிமக்கள், மற்றும் பிற வாடிக்கையாளர் சூழ்நிலையை கருதி் அவர்களுடைய வேண்டு கோளுக்கிணங்க கீழ்கண்ட முறையில் messenger வசதி பயன்படுத்திக் கொள்ள தற்போதைய SB Order மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதன்படி depositor தனது கணக்கிலிருந்து பணம் எடுக்கவும், கணக்கினை முடித்துக் கொள்ளவும், messenger வசதி பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கென புதிதாகஅனுமதி படிவம் form12 வழங்கப்படும். இந்த படிவத்தின் மூலமாக எழுதப் படிக்கத் தெரிந்த நபர் ஒருவரை மட்டுமே messenger ஆக பயன்படுத்த முடியும்.
Messenger ஆக நியமிக்கப்படும் நபரின் கையெழுத்தினை டெபாசிட்டர் உறுதி செய்திட வேண்டும். Joint B கணக்குகள் ஆக இருக்கும் பட்சத்தில் messenger கையெழுத்தினை ஏதேனும் ஒரு டெபாசிட்டர் உறுதி செய்திடலாம். எக்காரணம் கொண்டும் அஞ்சல் சிறுசேமிப்பு முகவர்கள் அல்லது அஞ்சல் அலுவல ஊழியர்கள் messenger ஆக பணியாற்றிட முடியாது.
டெபாசிட் தாரர் SB7 / 7 A/ 7B / 7C ஆகிய ஒன்றில் உரிய படிவத்தை பூர்த்தி செய்திட வேண்டும். Depositor மற்றும் messenger ஆகிய இருவரின் சுய சான்றிட்ட அடையாள அட்டை மற்றும் விலாச சான்று ( KYC) இவை இணைக்கப்படவேண்டும்.
ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளுக்கு ஒருவரை messenger ஆக நியமிக்கும் பட்சத்தில் ஒரு KYC மட்டும் வாங்கினால் போதுமானது. எனினும் ஒவ்வொரு கணக்குகளுக்கும் தனித்தனியாக அனுமதி படிவம் Form 12 வாங்க வேண்டும்.
Messenger அஞ்சல் அலுவலகத்தில் Form12, KYC இவற்றை அளித்திட வேண்டும். அஞ்சல் அலுவலகத்தில் depositor கையெழுத்து SB3 கார்டு மற்றும் Finacle இரண்டிலும் சரி பார்க்க வேண்டும். Depositor signature சரியாக இருக்கும் பட்சத்தில் அதனை supervisorக்கு அனுப்பிவிடவேண்டும்.
Supervisor மீண்டும் ஒரு முறை ஆவணங்கள் மற்றும் depositor கையெழுத்து இவற்றை சரிபார்த்து விட்டு அவருக்கு திருப்தி அளிக்கும் பட்சத்தில் உரிய குறிப்புகளை form 12 மேல் எழுதிட வேண்டும்.
தபால் அதிகாரி திருப்தி அடையாத பட்சத்தில் பொறுப்புள்ள அஞ்சல் அலுவலக ஊழியரை நேரடியாக Depositor டம் அனுப்பி விசாரித்த பிறகு withdrawal/ closure வழங்கிட வேண்டும். இந்த கூடுதல் சரி பார்ப்பு முறைக்கு பின் வழக்கமான வழிமுறைகளை பின்பற்றி withdrawal வழங்க வேண்டும்.
Messenger மூலம் நடைபெறும் Loan/ PMC/ Closure கள் எக்காரணம் கொண்டும் பணமாக வழங்கப்படமாட்டாது. Messengerன் அஞ்சல் சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்படும் அல்லது அவரின் பிற வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் அல்லது A/c payee cheque வழங்கப்படும்.
எனினும் இந்த நிபந்தனை சேமிப்பு கணக்குகளில் எடுக்கப்படும் withdrawal க்கு பொருந்தாது. SB Withdrawal மட்டும் messengerக்கு பணமாக வழங்கப்படும்.
SB7/7A/7B இவற்றில் messenger கையெழுத்து பெறப்படும். அதற்குப் பிறகு Messenger SB Account அல்லது Cheque அல்லது பிற வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்ட ரசீது இவை messenger இடம் வழங்கப்படும்.
Messenger மூலமாக பெறப்பட்ட அனுமதி கடிதம் மற்றும் KYC இவை அனைத்தும் அந்த withdrawal படிவத்துடன் இணைக்கப்பட்டு SBCOவிற்கு அனுப்ப வேண்டும்.
SBCO அனைத்து ஆவணங்களையும் சரி பார்த்து, பணப்பட்டுவாடா நடைபெறவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.
அனுமதி கடிதத்தை depositor கொண்டு வரவேண்டிய அவசியம் இல்லை . Messenger கொண்டு வரலாம்.
நடைமுறையில் உள்ள சில கடினமான வழிமுறைகளை தவிர்ப்பதற்காக டெபாசிட் தாரர்களுக்கு மாற்றுவழி பணப்பட்டுவாடா முறைகளை (ATM/ mbanking/ e banking) தெளிவுபடுத்த வேண்டும்.
Post a Comment